Description
காப்பியப் பண்பாகிய பாவிகமுடைத்தாய்ச் சந்தி யென்னும் உறுப்பு விளங்கத்தொடக்கம், இடைநிலைப் பகுதிகள் ஆய ஆக்கம் பெருகி இனிது முடியும் பெற்றியமைந்தது. இந்நூல் அளவிற்சிறியதாகத்தோன்றினும் சொல்லினும், பொருளினும் பெருமைமிக்கது. ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தலாதிய பத்தழகும், நூலமைப்பாகிய புத்தழகும்பெற்றுப் பொலிவதோடு சைவசித்தாந்த உண்மைப் பொருள்களும்கொண்டு மிளிர்வது.
பதினெண் கீழ்க்கணக்கு, தொகை, பாட்டு, பெருங்காப்பிய நூல்களாதிய இலக்கியங்களின் பாடல்களும், பாடற்பகுதி களும், அருஞ்சொற்றொடர்களும், அவ்வாறே தேவாரம், திரு வாசகம் முதலிய திருமுறை, திவ்வியப்பிரபந்தப் பாடல்களும்
ஆங்காங்கு மேம்பட்டு விளங்க,ஐந்திலக்கணக் கருத்துக்களும் உரிய இடங்களில் வெளிப்பட்டும், தொக்கும் திகழ அமைந்த இந்நூலின்மாண்பு, ஆசிரியையவர்களின் இலக்கிய இலக்கண நூல்களில் ஆழ்ந்தகன்ற புலமைத்திறனை நன்கு புலப்படுத்தா நிற்கும்.
Reviews
There are no reviews yet.