Description
இந்நாள் தமிழ் நாட்டுக்கு ஒரு நன்னாள் ஆகும். தமிழ்த் தாயைப் போற்றும் அன்பரும் அறிஞரும் நூற்றுக்கணக்காக இங்கு நிறைந்திருக்கின்றார்கள். தமிழ் நாடெங்கும் தமிழ் முழக்கம் செழித்தோங்குகின்றது. இலக்கி மாநாடுகள், இசை மாநாடுகள்-எங்கும் தமிழ் மணங்கமழ்கின்றது. சிந்தைக்கினிய, செவிக்கினிய செந்தமிழைத் தமிழ் நாட்டார் சீராட்டத் தொடங்கிவிட்டார்கள். பண்டைத் தமிழ்நூல்களைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தொண்டர் பல்லாயிரர்’ துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Reviews
There are no reviews yet.