Description
புதுமைப்பித்தனின் இயற்பெயர் விருதாசலம். தமிழ் மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் இவர் ஒருவர் என்று கூறினால் மிகையாகாது. சிறுகதை வடிவத்தை தமிழில் தோற்றுவித்தவர் இவரே என்பது சிலர் கருத்து. 1934 ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதையான “ஆற்றங்கரைப் பிள்ளையார்” மணிக்கொடி இதழில் பிரசுரமாயிற்று. பிறகு தொடர்ந்து இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், பல கட்டுரைகளையும், கவிதைகளையும், நாடகங்களையும் எழுதினார். நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், நாம் தினமும் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களையும் ஒரு மெல்லிய நையாண்டியோடு சொல்வதில் இவர் வல்லவர்.முப்பதுகளிலும், நாற்பதுகளிலும், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை இவருடைய எழுத்துகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன். இவர் பல ஐரோப்பிய சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்தார்.தமிழக அரசாங்கம், 2002 ஆம் வருடம் இவரின் அனைத்து படைப்புகளையும் நாட்டுடைமையாக்கியது. இந்தப் பொக்கிஷங்களைப் பரவலாகக் கிடைக்கச் செய்தமைக்காக நாம், நமது அரசாங்கத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.இவருடைய 108 சிறுகதைகளையும், 57 மொழிபெயர்ப்புகளையும் ஒருசேரத் தொகுத்து இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றைப் படித்து நீங்கள் இன்புறுவது நிச்சயம்!
Reviews
There are no reviews yet.