Description
1929ஆம் ஆண்டில் எனது நண்பர் கனம் ம.ஜ.ஜமாலுதீன் சாஹிபும் நானும் டில்லி சென்றிருந்தோம். அங்கே ஜாமியா மில்லியாவின் அதிபரான Dr. ஜாகிர் ஹுஸைனின் விருந்தாளியாக ஜாமியாவில் தங்கியிருந்தோம். அவ்வமயம் ஜாமியாவின் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் எங்களுக்கு நடத்தப்பட்ட உபசாரங்களும், விருந்துகளும் ஆனந்தம். இவ்வளவு உபசாரங்களுக்கும் காரணம் யாதென வினவிய போது “இந் ஜாமியா மரணிக்கும் நிலையில் இருந்தபோது, சென்னை முன்வந்து இதற்குக் கைகொடுத்து புத்துயிர் உண்டாக்கியது அச்சம்பவத்திற்குப் பின் சென்னையின் முதல் பிரதிநிதிகளாகிய உங்களுக்கு ஜாமியாவைச் சார்ந்தவர்கள் அவர்களது நன்றியையும் அன்பையும் இவ்வகையில் காட்டுகின்றனர்” என்று விடை பகர்ந்தார் Dr. ஜாகிர் ஹுஸைன்.
Reviews
There are no reviews yet.