Description
அளவற்ற அருாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் உதவியால் இந்நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது, பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆசிரியர் எளிமையான முறையில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் சுவையான தமிழில் குழந்தைகள் கடைபிடித்து ஒழுக வேண்டிய நற்பழக்க வழக்கங்களைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.தப்லீக் ஜமாத்துடைய வேலையில் ஈடுபடுவதினால் சிறுவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களைத் தனக்கே உரிய பணியில் நடந்த சம்பவங்களை வைத்து விளக்கியுள்ளார். குழந்தைகளின் தீய பழக்க வழக்கங்களின் காரணத்தினால் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை இந்நூலில் ஆசிரியர் நயம்பட சித்தரித்துள்ளார்.
Reviews
There are no reviews yet.