Skip to content Skip to footer

பாரதி பிறந்தார்

Author     :    கல்கி

தமிழகம் என்று முன்னாளில் பெயர் பெற்றிருந்த நன்னாடு, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் ஆளப்பட்டது. மலை வளமும் அலை வளமும் பெற்றது சேரநாடு; நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது சோழ நாடு; முத்து வளமும் முத்தமிழ் வளமும் கொழித்தது பாண்டி நாடு. சேரநாடாகிய மலைநாடு, இந்நாளில் மலையானம் என்று வழங்குகின்றது.

Accession No       : 43048

Language              : Tamil

Number of pages  : 196

Publisher                : பாரதி பதிப்பகம் தியாகராய நகரம் சென்னை-17.

Additional information

Categories: , , Tag: Product ID: 23751

Description

வளமார்ந்த மலைநாடு ஈராயிரம் மேற்கடலில் சேரநாட்டு இத்தகைய ஆண்டுகளுக்கு முன்னரே வாணிகத்தில் தலைசிறந்து விளங்கிற்று. அக்காலத்தில் சேர நாட்டுக் கடற்கரையில் முசிரி என்ற துறைமுக நகரம் செழிப்புற்றிருந்தது. சோழ நாட்டுப் பெருந்துறைமுகம் காவேரியின் ஆற்று முகத்தில் அமைந்திருந்தது போலவே சேரநாட்டுத் துறைமுகமாகிய பெரியாறு கலக்கும் இடத்தில் அமைந்திருந்தது. விரை பொருள்கள் எல்லாம் அத்துறைமுக நகரத்தில் குவிந்தன. அவற்றை நாடிப் பிற நாட்டு வணிகர்கள் கடல் வழியாகவும், தரை வழியாகவும் வந்து மொய்த்தார்கள். ‘பொய்யறியாப் புலவர்” என்று தமிழ்நாடு போற்றும் பரணர், முசிரியின் சிறப்பினைப் பாடினார். அப் பாட்டைப் புறநானூற்றிலே காணலாம். அவர் பாட்டிற் கண்ட செய்தியை அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புக்கள் வலியுறுத்துகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதி பிறந்தார்”

Your email address will not be published. Required fields are marked *