Description
அப்பெரு நல்லாளின் செவ்வையான இலக்கிய வரலாறு ஒன்று எழுதுதல் வேண்டுமெனும் வேணவா எழுந்தது; அதன் பயனே இச்சிறு நூல். இதனைச் செவ்வையாக விரித்து முழுமையாக்கும் முயற்சியுள்ளது. அது விரைவில் செயல்படும் என்பது நம்பிக்கை, இதன்கண்ணே காணலாகும் 24 கட்டுரைகளும் பட்டத் தமிழ்க் கல்வி பயிலும் மாணவர்க்குப் பயன்படுவ என்பது என் உறுதியாள எண்ணம். அவர்கள் இந்நூலினின்று ஓரிரு புதினக் கருத்துக்களைத் தெரிந்துகொள்வராயின் அதுவே இச்சிறு முயற்சிக்குப் பெருவெற்றியாகும்.இந்நூலின் தோற்றத்திற்குரிய ஆக்கத்தையும், ஊக்கத்தையும் எனக்கு வழங்கிய என் உழுவலன்பரும், எங்கள் கல்லூரிக் கணிதத்துறைத் தலைவருமாய திரு. எஸ். முகமது சிராஜுத்தீன், எம். ஏ., அவர்கட்கு என் நன்றி உரியது.
Reviews
There are no reviews yet.