Description
பல்வேறு கோணங்களிலிருந்து பாரதியின் பாடல்களை ஆராய்ந்து நான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருக்கிறேன். பாரதியின் புலமைத் திறனையும், புரட்சிகரமான கொள்கைகளையும் தமிழகத்தார் அறிந்து கொள்வதற்கு இந்நூல் பயன்படுமென்று நம்புகிறேன். ‘சிலப்பதிகாரத் திறனாய்வு’ உள்ளிட்ட என்னுடைய நூல்கள் சிலவற்றை வெளியிட்டு புதிய தமிழகம் படைக்க நான் ஆற்றிவரும் பணிகளுக்குத் துணைபுரிந்து வரும் “பூங்கொடி பதிப்பகத்” தாரே இந்நூலையும் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அப்பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. வே. சுப்பையா அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
Reviews
There are no reviews yet.