Description
நிலத்தை நிலைக்களமாக வைத்து விண்ணில் பறக்கும் காற்றாடி போலப் பழைய மரபுகளை மையமாக வைத்து புதிய தேவையான உணர்வுகளை உருவாக்குகிறவனே உயர் கவிஞன். பாவேந்தர் பாரதிதாசன் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த புரட்சிக் கவிஞர். பழைய வள்ளுவர் கொள்கைகளை இன்றைய நிலைக்கும் தேவைக்கும் தக இன்றைய மொழி நடையில் நவின்ற நற்கவிஞர். அவர் பாரதியைப் பாராட்டிய மொழிகளாலேயே அவரைப் புகழ்வது பொருத்தம். பழைய அறம் பாடவந்த அறிஞனாகவும் புதிய மறம் பாடவந்த மறவனாகவும் விளங்குபவர் பாவேந்தர்.
Reviews
There are no reviews yet.