Description
புரட்சிக்கவிபாரதிதாசன் அவர்கள் 29 4-1891-ல் புதுவை பிறந்தார். புதுச்சேரியில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இவரின் தந்தையாவார். கவிஞரின் இயற்பெயர் சுப்புரத்தினம். சுப்புரத்தினம் சிறு வயதிலேயே, பிரஞ்சு மொழிப்பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே அதிகம், தமது பதினாறாம் ஆண்டில் கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார் இயல்பால் தாய் மொழிப்பற்றும் முயற்சியில் தமிழறிவும் நிறைத்தவராதலின் இரண்டு ஆண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத்தேர்வுற்றர். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசியல் கல்லூரித் தமிழாசிரியராக்கினர். இளமையிலேயே, இயலுடன் இசையும் நாடகமும் அவரைத் தழுவி நின்றன, அவருடைய இசை இனிமையில் ஈடுபட்டோர், பள்ளி நாடகங்களில் அவரை முக்கிய நடிகராக்கி மகிழ்ந்தனர். முத்தமிழ் மன்னராக விளங்குதற்குரிய குறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன. மொழியறிவும், இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருளில் காட்சியளிக்கத் தலைப்பட்டன.
Reviews
There are no reviews yet.