Description
உமர்கயாம் பாரசீகக் கவி: நைஸாப்பூர் என்ற ஊரில் பதினோராம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றியவர்; கி.பி. 1123ல் அவர் மறைந்ததாகச் சொல்லப் படுகிறது . உமர்கயாம் வானசாஸ்திரத்தில் மகா நிபுணர் ; குரானிலும் மத நூல்களிலும் நன்கு பயின்றவர். பாரசீக மொழியில் பஞ்சாங்கம் கணிக்க நியமிக்கப் பட்ட சபையில், உமரும் உயர்ந்த ஸ்தானம் பெற்றிருந்தார். வான சாஸ்திரக் கணக்குகளை நிர்ணயிக்கும் புத்தகம் ஒன்றையும், அவர் நிரம்பிய புலமையுடன் உறுதியாக இயற்றினார்.
Reviews
There are no reviews yet.