Description
சாயபுதைக்காதர்காவில் குடிசைபோட்டு வாழும் மகுதும்கனி நிறைய புறாவளர்த்தாள். தர்காவின் அமைதியான சூழலில் பக்பக் என்று கூவும் புறாக்கள் வேதத்தை உருப்போட்டு தியானம் செய்வது போல் இருக்கும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு போல் புறா, பூனை, நாய், காகம், அடைக்கல குருவி எல்லாம் ஒன்றாக உறவாடி மேய்ந்துக் கொண்டிருக்கும்.உம்மா சீக்கிரமே குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கதர்காவிற்கு சென்றிருந்தான் சலீம். அவள் வாதநோயால் கட்டுண்டு கிடந்தாள். டாக்டர்கள் பார்த்தாயிற்று, இனி அல்லாவும் அவுலியாவும் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை. சலீம் புறாக்களையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
Reviews
There are no reviews yet.