Description
முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று, மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன.
Reviews
There are no reviews yet.