Description
இத்திருக்குறட் பொருளைத் தமது புலமைத் திறத்தாலும் பண்புடைமையாலும் புலப்படுத்தியவர் மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்களாவர். பிறர் துணையின்றித் தமது நுண்ணறிவால் செந்தமிழ்ப் பெருநூல்களைத் தெளிவாகக் கற்றதோடு மொழியும் நன்கு பயின்ற சிறப்பு அவர்களுக்கு உண்டு. இருமொழிப் புலமையாலும் இனிய சொல்வன்மையாலும் இறுதி நாள்வரையிலும் தமிழ்த் தொண்டு புரிந்த பெருமை பண்டித மணியவர்களுக்கு உரியதாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலே தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுடையராய்த் தமிழ் மக்களைத் தமிழ் வாழ்வில் ஈடுபடச் செய்தற்குக் காரணராய் விளங்கிய பெரும் புலவர்களுள் முதல் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர் நம்பண்டிதமணியாவர்.
Reviews
There are no reviews yet.