Description
மலர்கள் கவிஞருக்கும் அறிஞருக்கும் மாதருக்கும் மாதேவருக்கும் மாத்திரம் பயன்படுகிறது என்று நினைக்கவேண்டாம். மாந்தர்க்கும் பிணிபோக்கும் வசையிலே பல்லோர்க்கும் இன்று பயன்பட்டு வருகிறது. அழகுக்காகவும் ஆராதனைக்காகவும் இருந்த மலர் ஆய்வுக்குப்பின் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும், சித்தவைத்தியத்திலும், யூனானி வைத்தியத்திலும் இடம் பெற்றிருந்ததை இடைக் காலத்திலுள்ள மக்கள் அறியாதிருந்தது அதிசயமேயாகும். இன்று சித்தவைத்தியத்திற்கு ஏற்றம்காணும் முறையில் சில பல முயற்சிகள் ஆங்காங்கே தமிழகத்திலே நடைபெற்று வருகின்றன. இத்தருணத்தில் பச்சிலையை அறிந்த அளவுக்கு பல மலர்களின் மருத்துவ நலன்களையும் எல்லோரும் அறிந்த கொள்வது என்பது நம் முன்னோர்களுக்குச் சிறப்புத்தேடிக்கொடுப்பதாகும்.
Reviews
There are no reviews yet.