Description
அருமை நண்பர் மணவை முஸ்தபா சிறந்த தமிழறிஞர். ‘நச்சினார்க்கினியர்’ என நற்றமிழ்ப் புலவர்களால் பாராட்டப்படுபவர். அறிவியல் கருத்துக்கள் தமிழில் பெறவேண்டுமெனும் ஆர்வத் துடிப்பினர், ‘யுனெஸ்கோ கூரியரின்’ தமிழ் இதழ்ப் பதிப்பாசிரியராக இவர் ஆற்றிவரும் தொண்டு அளவிடற்பாலது. உலகை வலம் வந்து அங்குள்ள தமிழ் மக்களோடு கலந்து பழகி அவர்களின் வாழ்க்கை முறைகளை நன்கறிந்தவர். இவர் ‘மீரா அற நிறுவனம்’ எனும் ஓர் அமைப்பைத் தோற்று வித்து நடத்தி வருகிறார். இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் உலகத் தமிழர் அனைவரும் தம் மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றிணைய ஓர் உறவுப் பாலம் அமைய வேண்டுமென்பதேயாம்.
Reviews
There are no reviews yet.