Description
நான் காந்தி காலத்தோடு ஒட்டியே வளர்ந்தவன். அதன் செல்வாக்கால் பாதிக்கப்பட்டவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்த செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது. அந்த விளைவுதான் ‘சத்யாக்ரகி’ என்ற என் சிறுகதை தொகுப்பில் உள்ள பன்னிரெண்டு கதைகளும் பிற்பாடு எழுதிய மூன்று கதைகளும். உலக இலக்கியங்களை புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம். பிரஞ்சு புரட்சி நாட்கள், ரஷ்ய புரட்சி ஆண்டு, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட காலம், அமெரிக்க உள் நாட்டுப் போர்க்காலம் போன்றவை சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கதைகள், கவிதைகள் இயற்றப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.
Reviews
There are no reviews yet.