Description
அங்கு வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும், நற்குடிப் பிறப்பும், பழியஞ்சிப் பாத்துண்டலும், வடுவஞ்சி வாய் மொழிதலும், நடுநிலை கோடாமையும், அன்பும் அறனும், இன்பு மீகையும் ஒருங்கமைந்த சவரிமுத்துப் பிள்ளை யென்னும் தச்சார் ஒருவர்க்கும், அவர்தம் கற்பிற் சிறந்த வளத்தக்க வாழ்க்கைத் துணையும், மனைமாண்பும், சோர்வின்மையும், தெய்வநாட்டமும் வாய்ந்த ஆரோக்கியமரியம்மாள் என்பவருக்கும் தவப்பேற்றால் உலகுய்ய அருனால் ஓர் ஆண்மகவு தோன்றிற்று. அம்மகவுதான் நம் அருமை வேதநாயகம்பிள்ளை யென்னும் செம்புலச் செல்வர். அவர் தோன்றிய நன்னாள், ஆயிரத்து எண்ணூற்றிருபத்தாறாம் ஆண்டு, அக்டோபர் பதினான்காம் நாள். இவர்கள் முன்னோர் கிறித்துவ நெறியைப் பின்பற்றுபவர்கள். ஆயினும், நம் பிள்ளையவர்கள் நெறிப் பிணக்கின்றி, ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்னும் திருமுறைக் கிணங்கப் பொதுநோக்கு மிக்குடையவர். பழம்பிறப்பின் தொடர்ச்சியால் தம் பதினொன்றாம் அகவைக்குள் தமிழ்நூற்கள் பெரும்பான்மையும் கற்று வல்லாராயினர்.
Reviews
There are no reviews yet.