Description
நல்ல வேளையாக, அந்தச் சமயத்தில் ஊரில் இருந்து மாமா வந்து சேர்ந்தார். குழந்தைகளிடம் மாமா அன்பாகப் பழகுவார்; தின்பண்டங்கள் வாங்கித் தருவார்; கண்காட்சி சாலை, மிருகக்காட்சி சாலை, கடற்கரை, கோவில், பூங்கா முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார்; கருத்துள்ள கதைகள் சொல்லுவார். ஆனால், அவர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. அதனால், அவரைக் கண்டால் குழந்தைகளுக்குப் பிரியமும் உண்டு; பயமும் உண்டு. மாமா வந்து சேர்ந்ததும் குழந்தைகள் மறுபடியும் குறித்த நேரத்தில் குளித்தனர் ; உணவு உண்டனர் ; உறங்கினர். மாமாவோ பணக்காரர்; ஆதலால், குழந்தைகள் விரும்பிக் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்; பல்வேறு இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டினார். ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாள் மாலை நேரம். மாமா நாற்காலியில் அமர்ந் திருந்தார். குழந்தைகள் அவரைச் சுற்றி நின்றுகொண் டிருந்தனர். “இன்று முதல் உங்களுக்குக் கதை சொல்ல நினைக்கிறேன்.
Reviews
There are no reviews yet.