Description
இருகரை மருங்கிலும் திரையாகிய கரங்களால் வாரிப் பொன்னையும் மணியையுங் கொழித்துப்புனல் பெருகிவரும் காவிரி பாய்தலால், வேலி நிலம் ஆயிரம் கலம் வினையுளை விளைத்து வனத்தால் மிக்கு விளங்குவது, சேணாடுகளினும் தன் பெயர் நிறுவிய சோணாடென்பது. இச்சோணாட்டின் கண் காவிரிக்கரை மருங்கிலே விளங்குவது, காவளம் மிகுந்த ஆவூர் என்னும் அழகிய ஓரூர். இவ்வூர்ப்புறமெல்லாம் காவிரியின் தெள்ளிய தீம் புனல் பரந்து பாய்தலால், தெங்கு, மா, பலா, வாழை, கமுகு முதலிய பயன்மிக்க மரங்கள் பருவத்தாலன்றியும் பழுத்து, உருவத்தால் ஓங்கித்திகழும்.
Reviews
There are no reviews yet.