Description
இம் மாற்றம் எல்லாக் கூட்டத்தினரிடை யும் ஒரே வகையாக நிகழவில்லை; வெவ்வேறு வகையாக நிகழ்ந்தது. அதனால் ஆதியில் வழங்கிய ஒரு மொழியே நீண்டகாலச் செலவில் பல மொழிகளாக மாறியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பை மறந்தார்கள். ஆகவே, அவர்கள் தாம் மற்றவர்களோடு தொடர்பற்ற தனி வகுப்பினர் எனக் கருதலானார்கள். இவ் வாறு உலகில் பல மொழிகளும் பல மக்கட் பகுப்புக்களும் தோன்றின.ஒரு மொழிகள் மக்கள் வரலாற்றை நன்கு அறி விப்பனவாகும். ஒரு கூட்ட மொழிகள் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தனவாகக் காணப்படின் அம் மொழிகளைப் பேசும் மக்கள் எல்லோரும் கூட்டத்தினராக வாழ்ந்தார்கள் எனக் கொள்ளலாம். இன்னொரு கூட்ட மொழிகளின் ஆதிமொழிக்கும் இவ் வாதி மொழிக்கும் ஒற் றுமை காணப்பட்டால், இரு ஆதி மொழிக் குரிய மக்கள் நெடு நாட்களுக்குமுன் ஒன்றாக வாழ்ந்து பின்பு இரண்டாகப் பிரிந்தனர் எனக் கருதலாம்.
Reviews
There are no reviews yet.