Description
இனிய தமிழில் எம்பெருமானாரின் வரலாறு சொல்லும் முழுமையான நூல் சிந்தையை அள்ளும் சீறாப்புராணமாகும். ராமாயணத்தை கம்பனைப்போல எவராலும் சொல்ல முடியவில்லை. கற்புக்கரசி கண்ணகியின் கதையை சிலம்பு தந்த இளங்கோவைப் போல் இன்னொருவரால் தர முடியவில்லை. ஆனாலும் முயற்சிகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திரு நபி நாதரின் வரலாறு சொல்ல சகோதரர் அப்துல்லாஹ் அடியார் உரை வீச்சுவாளோடு கவிதைக் கேடயத்தையும் எடுத்துக்கொண்டுகளம் கண்டிருக்கிறார். எம்பெருமானாரின் வரலாறு சொல்ல வந்ததே ஒரு பெரிய முயற்சியாகும். இதில் வெற்றி காண இறைவனை இறைஞ்சுகிறேன்.
Reviews
There are no reviews yet.