Description
அடியார்கள் மீது அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் கொண்ட எல்லாம் வல்ல அல்லாஹுத்த ஆலாவின் உதவியை என்றும் வேண்டினவனாக துவங்குகிறேன். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனது இறுதி தூதர் நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள் மீதும் மற்றும் அவர்களைச் சார்ந்த அனைவர்கள் மீதும் இறைவனின் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக! வாசக அன்பர்களே! தொழக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற இந்த நூல் உங்களுக்கு நிறைந்த பயனளிக்குமென நம்புகிறேன். எழுத்துத் துறையிலும், பேச்சுத் துறையிலும் சமுதாய மக்களோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் நான் செல்வதுண்டு. அது சமயம் பலரும் என்னிடம் தொழத் தெரியாதவர் தொழத் தெரிந்துக் கொள்ளவும், வழக்கமாக தொழுது வருபவர்கள் தொழுகையின் செயல்களை முறையாக அறிந்து தொழுவதற்கும். மத்ரஸா, மக்தபு மாணவ மாணவிகள், நிஸ்வான் மாணவிகள், யாவருக்கும் தொழுகை சம்பந்தமாக படித்துக் கொடுக்கவும் வசதியாக ஒரு சிறப்பான நூல் வெளி வந்தால், இன்றைய கால சூழ்நிலைக்கு மிக்க நலமாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
Reviews
There are no reviews yet.