Description
அரசியல் போராட்டமும், சுதந்திர தாகமும், சமூகாபிமானமும் சுடர்விட்டெரியும் இதுகாலை குறிப்பாக தென்னாட்டு முஸ்லிம் மகாஜனங்கள் உணர்வடைந்து உத்வேகங்கொண்டு, உன்னதமடைய அவர்களின் பண்டைய பெருமை, கீர்த்தி, வீரம், தீரம் முதலிய அரிய சற்குணங்களை ஞாபகப்படுத்துவது மிகமிக முக்கியம். ஆனால் அக்கடமை இந்நாள் வரை தமிழ்நாட்டு முஸ்லிம்களின் தாய்மொழியில் தேவைக்கேற்ப நிறைவேற்றப்படாதது நமது துற்பாக்கியமேயாகும். மது ஊர்வாசியும், என்னுடன் நன்கு பழகியவருமான மௌலவி அ. ஸதக்கத்துல்லாஹ் (பாக்கவீ) அவர்கள் எழுதிய “தென் ஓடும்-இல்லாமும்” என்னும் இந்நூலானது அக்குறையை ஒருவாறு பூர்த்தி செய்துவிட்டது. இதுபோன்ற தென்னாட்டு இஸ்லாமியச் சரித்திரம் தமிழில் வெளியாகவில்லை.
Reviews
There are no reviews yet.