Description
நாளடை வில் அவர்கள் வேட்டையாடுவதற்கு உதவியாக நாய்களையும், பால் இறைச்சி முதலியவைகளுக்காக ஆடு மாடுகளை யும் வளர்க்கத் தொடங்கினார்கள். தங்கள் ஆடு மாடு களுக்குப் புல் வேண்டியிருந்தபோது புல்தரை இருக்கும் இடம் தேடி நாடெங்கும் தங்கள் கால்கடைகளுடன் அமைந்து வந்தார்கள்.
நிலையான வாழ்க்கைக்குக் காரணம் விவசாயமே : இயற்கையிலே கிடைத்து வந்த பழங்கள், கிழங்குகள், தானியங்கன் முதலியன ஜனத்தொகை பெருகப் பெருகப் போதவில்லை. கிடைப்பவையும் எல்லாப் பருவங் களிலும் கிடைக்கவில்லை; அதிகமாகக் கிடைக்கும் காலங் களில் சேமித்து வைக்கவென்றால் ஓரிடத்தில் நிலையான வாழ்க்கையை அவர்கள் பெற்றிருக்கவில்லையே! இந்த நிலையில் அவர்கள் தமக்கு வேண்டிய தாவர வர்க்கங்களைப் பயிரிட ஆரம்பித்தனர். ஒன்றைப் பயிரிடுவதென்றால் அதனை விதைத்து விளையும் வரை காத்திருக்கவேண்டும். இதற்காக அவர்கள் தாங்கள் பயிரிடும் இடங்களில் நிலையாகத் தங்கலானார்கள்.
Reviews
There are no reviews yet.