Description
மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது. உலகிலேயே இந்தோனேசியா பெரிய முஸ்லிம் ஜனத்தொகையுள்ள நாடு. தென்கிழக்கு ஆசியாவில் முஸ்லிம் (ஸூஃபி) ஞானிகளும். வியாபாரிகளும் இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பினார்கள். அந்த இறைநேசர்களின் புனித அடக்க ஸ்தலங்கள் ஆங்காங்கு மக்களால் மரியாதை செய்யப்பட்டு வருகின்றன. ஆயினும், அவர்கள் வந்த காலம், செய்த இஸ்லாமிய (தப்லீக்) பிரச்சாரப்பணி, சென்ற பிரதேசங்கள் முதலிய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆகையால், இந்த நாடுகளின் இஸ்லாமிய வரலாறு நமக்கு நிறைவாகக் கிடைக்கவில்லை. முயற்சிகள் பல செய்து, கிடைத்த ஆதாரங்களுடன் ஒருவாறு இந்த நூல் உருவாக்கப்பட்டது. இதில் S. Q. Fatima எழுதிய Islam comes to Malaysia (இஸ்லாம் மலேசியாவுக்கு வருகிறது) என்னும் நூலும் D. G. E. Hall 67 A History of South East Asia (தென் கிழக்கு ஆசியாவின் வரலாறு) என்னும் நூலும் பெருந்துணையாக இருந்தன. ஆகவே கிடைத்ததைக் கொண்டு மன நிறைவு பெறுவோம்.
Reviews
There are no reviews yet.