Description
உலாப்பிரபந்தத்தில் ஏழுமகளிருடைய பருவங்களுக்கேற்ற செயல்களாகிய சிற்றிலிழைத்தல், சிறுசோறடுதல், கழங்கு பந்து அம்மானையாடுதல், கிளி பூவைமுதலியவற்றோடு குலவுதல்,யாழ் வாசித்தல், பொழிலாட்டு, புனல்விளையாட்டு, மலர்விழாவெடுத் தல், ஊசல் முதலியனவும் பாட்டுடைத்தலைவனது சிறப்புக்களும் தசாங்க முதலியனவுமாகியவற்றில் சில குறைந்தும் குறையாமலும் வரும்.பழைய திரு இலஞ்சி முருகனுலாவென்பது இலஞ்சியென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது.
Reviews
There are no reviews yet.