Description
நாடும் நூலும் திருவள்ளுவர் தமிழ்நாட்டில் தோன்றியவர்; திருக் குறள் என்ற நூலை யாத்தவர். இங்கே அவர் தோன்றிய நாட்டுக்குச் சிறப்பளிப்பதா ? அல்லது அவர் யாத்த நூலுக்குச் சிறப்பளிப்பதா? நூலுக்குச் சிறப்பளிப்பதே சால்பு ஏன்? திருக்குறள் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுவதாய் அமையவில்லை. அஃது உலகுக்கும் பயன்டுவதாய் அமைந்துள்ளது. நாட்டினும் உலகம் பெரிதன்றோ?
உலகுக்கென்று ஒரு நூலை அளித்த ஒருவரை ஈன்ற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இது குறித்துத் தமிழ் மக்கள் இறும்பூதெய்தலாம்; இறுமாப்படையலாம். ஆனால் திருவள்ளுவரைத் தமிழ்நாட்டளவில்கட்டுப்படுத்தலாகாது. அதுதளையாகும்; சிறையாகும்.
Reviews
There are no reviews yet.