Description
எல்லா வகையிலும் ஏற்றங்காட்டிய இசுலாமிய இலக்கியவுலகில் பாவை நூல் இல்லாக்குறை, அடியேனால் ஆக்கப்பட்ட இத்திருப்பாவையால் தீருமென நம்புகின்றேன். இப்மாதங்களில் மாண்புடையபாவை நூல் இசுலாமிய இரமலான் மாதத்தில் மலர்ந்தது. இம்மாதத்தில் இந்நூலின் பாக்களால் இறையுணர்வு மீக்கூரும். இறையின்ப இன்பயன் இனிதோங்கும். இந்நூல் பாத்திமாபதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடு இதனை இயற்றியது மட்டுமே என் வேலை. ஆனால் இதன் உருவாக்க உழைப்பனைத்திற்கும் உரியவர் எல்லா வேலைகளையும் ஏற்றாற்றியவர் என்னரும் தம்பி மு. சாயபு மரைக்காயர் என்பதை ஈண்டுக்குறித்து இன்புறுகின்றேன்.
Reviews
There are no reviews yet.