Description
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் 1972-ஆம் ஆண்டில் திருச்சி ஜமால் ‘முகம்மது கல்லூரியில் நிறுவப் பெற்றது. அடுத்த ஆண்டிலேயே அது அனைத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முதல் மாநாட்டினைத் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்திலேயே வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் பலனாக இஸ்லாமியத் தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றப் பெற்றது. இரண்டாவது. மாநாடு .சென்னை, புதுக் கல்லூரி வளாகத்தில் 1974 ஆம் ஆண்டில் மேலும் சிறப்பாக நடைபெற்றது. மூன்றாம் மாநாடு 1978-ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் நடத்தப் பெற்றது.