Description
திரு நபி சரித்திரம்’ என்ற சிறந்த நூலை மதிப்புற்ற அதன் தென்காசி ஜனாப்மு. ந. ஹாஜி முஹம்மது சாஹிப் விரிவுபடுத்தி இரண்டாம் பதிப்பாக வெளியிட்டிருக் அதுபற்றி மகிழ்ச்சியடைகிறேன். இந்த இரண்டாவது பதிப்பில் சேர்த்துள்ளவை முதல் நூலின் இயற்கையான பகுதிகள் போலவும், அவசியமான அம்சங்களாகவும் விளங்குகின்றன. மொத்தத்தில் இவ்வெளியீட்டின் பல அம்சங்களும் கலைச்சரித்திரத்திலே நிலையான, பிரதானமானதோர் இடத்தை அதற்கு அளிப்பனவாயிருக்கின்றன. இப்புத்தகத்தின் உள்ளடக்க விஷயங்கள் சரித்திர ஆதாரம் பெற்றவை; அதிகாரப்பூர்வமானவை. இதில் கூறப்பட்ட ஒவ்வொரு சம்பவமும் விஷயமும் ஆராய்ந்து அலசியெடுத்துக்கோர்க்கப்பட்டதாகும். இந்நூலின் பாஷை வெகு சுத்தமானதும், தெளிவும், எளிமையும் உயிராகக்கொண்டதும் ஆகும். அதன்நடையோ இயற்கை ஓட்டங்கொண்டதாகவும், இனிமையும் அழகும் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.