Description
ஆதலால், அறிவுக்குப் பொருத்தமான உலகப் பொது நெறிகளைக் கொண்டு பொலிகின்றது. இதனால், உலகப் பேரறிஞர்கள் பலர் ‘திருக்குறள் அறிவிற்குப் பொருந்தாத மூடக் கொள்கைகளை முற்றும் விலக்கி, அறிவியல் நெறிகளை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒப்புயர்வற்ற செப்பமுடைய உயரிய நூல்’ எனப் பாராட்டிப் புகழ்ந் துள்ளார்கள்; புகழ்கின்றார்கள். இதற்குப் பழைய உரைகளும், புதிய உரைகளும் பல உள்ளன. பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே உயர்ந்தது எனப் புலவர் பலரும் போற்றியுள்ளார்கள். ஆதலால், அதைத் தழுவியே பின்னால் தோன்றிய உரைகள் பெரும்பாலும் எழுதப்பட்டன. ஆஹால், பரிமேலழகர் உரையில் இடையிடையே வடநூற் கொள் கைகளை வலிந்து திணித்தும், பலவிடங்களில் அக்கொள் கைகளுக்கேற்ப மூலபாடத்தையே திருத்தி அமைத்தும், வடநூல்களைத் தழுவியே திருக்குறள் ஆக்கப்பட்டுள்ள தென்பதை நிலைநாட்ட அரும்பாடுபட்டிருக்கிறார், இதனால், திருக்குறளுக்குரிய தனிச் சிறப்பை (உரையால்) மறைத்துவிட்டார்.
Reviews
There are no reviews yet.