Description
இறையருள் கவிமணி டாக்டர் கா. அப்துல்கபூர் ஸாஹிப் அவர்கள் பல்வேறு கவியரங்குகளில் இறைவனையும், இறைவனின் இறுதித் தூதர் நபிமணி (ஸல்) அவர்களையும் போற்றிப் புகழ்ந்து, அரங்கேற்றிய தலைமைக் கவிதைகளைத் தொகுத்து ஒரு நூல் வடிவில் “தலைப்பா” என்னும் பெயர்சூட்டித் தமிழ்கூறும் நல்லுல கிற்குத் தந்திருப்பது மகிழ்வுக்கும் பாராட்டிற்கும் உரியதாகும். உருது கவியரங்கங்கள் (மூஷாயிராக்கள்) கொண்டிருந்த காலகட்டத்தில், கால் நூற்றாண்டுக்கு முன்பே, கவின்மிகு தமிழில் கவியரங்கங்களைக் கல்லூரிகளிலும், ஏனைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாக்களிலும் அறிமுகப்படுத்திய பெருமை பேராசிரியர் அவர்களுக்கு உண்டு.
Reviews
There are no reviews yet.