Description
“இஸ்லாம் எங்கள் வழி! இன்பத்தமிழ் எங்கள் மொழி” என்ற இலட்சிய நோக்கதோடு, கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தொடர்ந்து தொண்டாற்றி வருவது நம் இஸ்லாமியத்தமிழ் இலக்கியக்கழகம், உலகளாவிய நிலையில் நானூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு நம் இலக்கியக்கழகத்தில், இஸ்லாமியப்பெருமக்களேயன்றி இந்து, கிறித்துவச்சமயங்களைச் சார்ந்த சான்றோர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டிருப்பது கழகத்தின் தனிச்சிறப்பாகும். நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, முத்துப்பேட்டை, ராஜகிரி ஆகிய நகரங்களில் எட்டு மாநாடுகளை இஸ்லாமியத்தமிழ் இலக்கியக்கழகம் மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறது. 90 நூல்கள் பல்வேறு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. சாதனை படைத்த சான்றோர்கள், முதுபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், புரவலர்கள் என்று 108 பெருமக்கள் கழக விழாக்களில் விருதுகள் வழங்கிப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
Reviews
There are no reviews yet.