Description
தமிழ் இலக்கியம் பேசும் பொருள்கள் எல்லாம் காதல், வீரம் என்ற இருபெரும் பொருள்களிலே அடக்கிக் காட்டப்படுவதுண்டு. காதல் பிறரை விரும்புவது; வீரம் அவ்விருப்பத்தின் விளைவாகப் பிறர்க்கு நலம் ஆக்கவும் தீமை போக்கவும் தம்மைத் தியாகம் செய்வது. மானங்காக்கவும், பெருமை சேர்க்கவும் உள்ளத்தில் பொங்கியெழும் பெருமித உணர்வு வீரம் எனப்படும். இவ்வீரவுணர்வு தமிழகத்தில் சிறந்து நிற்கக் கண்ட பாரதி. ‘வீரம் சிறந்த தமிழ்நாடு’ எனப் பாடினான். பாரத நாட்டின் பெருமையைப் பாடும் போதெல்லாம் வீரத்திற்கும் தீரத்திற்கும் முதலிடம் தருவான் பாரதி. நாடு இணையற்ற நாடு எனப் பெருமிதம் கொள்ளும் போது, காரணம் பல காட்டுவான் பாரதி.
Reviews
There are no reviews yet.