Description
மலர்தலையுலகின் மல்கிருளகல, விலகொளி பரப்பும் ஞாயிறு போல மாந்தர் மனவிருளகல அறிவு பரப்புவது நம் தமிழ் மொழியாம். உயர்தனிச் செம்மொழியெனப் பன்னாட்டினராலும் புகழ்ந்து பாராட்டும் பெருமையுடையதும் அதுவே. நம்மொழி நூல்கள் இலக்கியம், இலக்கணம் என இருவகைப்படும். தொல்காப்பியம், கன்னூல் முதலியவை இலக்கண நூல்கள். திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலியவை இலக்கிய நூல்கள். இலக்கிய நூல்களிற் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்ற பிரிவும் பிற்காலத்துளவாயின. பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற புராணங்களும், நல்வழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம், நீதிநூல் முதலியனவும், வரலாற்று நூல்களும், அறநூல், பொருணூல், இன்பநூல், வீட்டுநூல் என்பனவும் பேரிலக்கியமாகப் பிரித்தனர் புலவர்.
Reviews
There are no reviews yet.