Description
உலகெங்கணும் வாழ்கின்ற மக்கள் தாம் என்றென்றும் இன்பத்தில் திளைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுதல் இயல்புங்கூட. ஆனால், அனைவரும் அவ்வாறு எண்ணிய இன்பத்தை எண்ணியாங்குப் பெறுதல் இயலாது. அதையும் நாம் காண்கின்றோம். என்றாலும், வாழ்வில் சில நாட்களையாவது அனைவருக்கும் இன்ப நாளாகக் கரண விரும்புகின்றனர் நல்லவர்கள். எத்துணைத் துன்பத்தில் பட்டுழன்றாலும். வாழ்வில் சில நாட்களாவது அனைவரும் ஒருசேர இன்பத்தில் திளைக்க வேண்டாவா ? என்று எண்ணிற்று அவர்தம் உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்வே உலகில் விழாக்கள்தோன்ற வழிகாட்டியாய் அமைந்தது. விழாக்கள் நாடுதோறும் ஒவ்வொரு வகையில் நடை பெறுகின்றன. மேலை நாடுகளிலும் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுவதைக் காண்கின்றோம்.
Reviews
There are no reviews yet.