Description
பொதிகையில் பிறந்து வைகையில் தவழ்ந்த தமிழ் வாழ் உலகின் ஆதிச் சமயங்களாகச் சைவமும் , வைணவமும் தோன்றலாயின. ஆண்டு நாயன்மார்கள் வளர்த்த நற்றமிழும் ஆழ்வார்கள் வளர்த்த பைந்தமிழும் வளம் கொழித்து முகடு முட்டியகாலை சமண முனிவர்கள் தோன்றிச் செந்தமிழ் வளர்த்தார்கள். இவற்றில் சமணப் பெரியார்கள் தமிழுக் காற்றிய திருப்பணியினைச் செயற்கரிய செயல் என்றே கூறலாம். பின் பௌத்தப் பெரியார்கள் தமிழ் வளர்க்க முன் வந்த காலத்திலே தமிழ் மலை விளக்குப் போன்று எண் திசைகளிலும் எழில் பிறங்கத் தலைப்பட்டது. அப்பால் மேலை நாட்டினரான கிறித்தவர்கள் தமிழகத்தில் அடி எடுத்து வைத்தபோது அவர்களையும் தமிழ் தன் காந்தப் பிடிப்பால் பிடித்துக்கொண்டதை அறிகின்றோம்.
Reviews
There are no reviews yet.