Description
“தெண்ணீர் வயற்ருெண்டை நன் னாடு சான்றோருடைத்து,” என்ற மூதுரையை மனக் கொளாது தென்னாட்டுப் புலவருட் சில் லோர் போந்து புரிந்தவாதப் போரின்கண் நந்தம் புலவர்பிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டானெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழா நிற்புழி, விசயதரன் வடகலிங் கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து போந்து, சயங்கொண்டானை நோக்கி, ‘யானுஞ் சயங்கொண்டானாயினேன்,’ எனவே, ‘சயங்கொண்டான். சயங் கொண்டான் மீது பரணி நூற்புனைவான்,’ என்று நம் பாவலர்கோமான் கூறிச் சென்று சின்னாட்களுள், ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலினை யியற்றி யரசனதவைக்களத்தே பன் னூற் புலவர்முன் பகர் தந் தரங்கேற்றிய கருதி. அவ்வாறே செய்யா நின்றுழி, பரணிநூற்பாடல் களைப் பரிவு கூர்ந்து செவிமடுத்து வீற்றிருந்த வேந்தர் வேந்தன் ஒவ்வொரு தாழிசையி னிறுதியினு மொவ்வொரு பொற்றேங்காய் பரி சிலாவுருட்டுபு தனக்கு அவ்வித்துவான் மீதும் அவனது நூலின் மீதுமுள்ள அன்பினையு மார் வத்தினையும் வெளிப்படுத்தானென்று கூறுப.
Reviews
There are no reviews yet.