Description
அப்பெரும்பொருளைக்கொண்டு முத்தைய செட்டியார் சிவத்திருப்பணிகள் செய்யமுற்பட்டார். சிதம்பரம் என வழங்கும் தில்லைப்பதியில்,எல்லையிலா இன்ப நடம் புரியும் அம்பலவாணரிடத்து அவர் உள்ளம் ஈடுபட்டது. கூத்தப் பெருமான் திருக்கோயிலைப்பழுது பார்த்துச்செப்பஞ்செய்து புதிய திருப்பணிகளும் முடித்துக்குடமுழுக்கும் நிகழ்த்துவித்தார்; அம்பலவாணருக்கு நாடோறும் காலையிற் பால் முழுக்காட்டும் இரவு இரண்டாங்காலத்தில் அன்னப்பாவாடையும் நடைபெறத்திட்டம் வகுத்தார்; இறைவனுக்குத் தமது பூங்காவிலிருந்தே நறுமண மலர் மாலைகள் தொடுத்துச்சாத்தப் பெறுதல் வேண்டுமெனத் திருநந்தவனம் அமைத்தார்; சைவ சமய குரவர்கள் அருளிச்செய்த தேவாரம் திருவாசகம் முதலான திருமுறைகளை நன்மாணாக்கர் வரன்முறையாகக் கற்கவும், ஆண்டவன் திருமுன்னர் அவற்றை ஓதி உய்தி பெறவும் வேண்டுமெனக் கருதித் தேவார பாடசாலை நிறுவினார்.
Reviews
There are no reviews yet.