Description
அவர்களின் பேரன்புக்கு என்ன கைமாறு செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, ”இதேபோன்று, தமிழில் வெளிவந்த இசுலாமிய இதழ்களையும் தொகுத்துக் கொடுங்களேன்” என்று தம்பி அய்யூப் சொன்னார். அது மிக நல்ல யோசனையாக எனக்குத் தோன்றியது. இதுவரை யாரும் செய்யாத முயற்சி, அது. எனக்குப் பழக்கப்பட்ட ஒன்று. முசுலிம் பெருமக்கள் தமிழுக்கு ஆற்றிய ஆற்றி வருகின்ற இலக்கிய- இதழ்ப் பணிகளை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும். ஏன், அவர்களுக்கே கூட ஒரு நிரந்தர வரலாறாக விளங்கும். எனவே, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு முசுலிம் பெரியவர்களின் ஆதரவு எனக்குத் தேவை” என்று ஒரு அறிக்கை வெளியிட்டேன்.
Reviews
There are no reviews yet.