Description
”தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்- ஒரு வரலாற்றுப் பார்வை” என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு 1988 இல் அளிக்கப்பெற்ற முனைவர் பட்ட ஆய்வேடு இப்போது சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக மலர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ்ப் பண்பாட்டின் தலைநாட பருவத்தில் முகிழ்த்த அகப்பொருள் என்னும் இலக்கிய வகை காலந்தோறும் பெற்று வந்த வரவேற்பை வரலாற்றாய் வடிப்படையில் ஆராய்வது இந்நூலின் தலையாய நோக்கம். தொல்காப்பியந்தொட்டுத் தொடர்ந்த தமிழிலக்கண நூல்களும், சங்கத்துச் சான்றோர் பாடல்கள் முதல் இக்காலம் வரை எழுந்துள்ள தமிழிலக்கியங்களும் இவ் ஆய்வுக்குரிய முதன்மைத் தரவாதாரங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. அனுமானங்களை அடிப்படையாகக் கொள்ளாது தரவுகளின் அடிப்படையில் செயற்படும் ஒப்பியல் நோக்கு இவ் ஆய்வின் திறனாய்வுப் பார்வையாக அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.