Description
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நானும் தமிழிலக்கியம் கற்றேன். தமிழ் ஆசிரியனாக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். தமிழ் மீது எனக்கு மிகுந்த நேயம் உண்டு. எனக்கு யாரும் தமிழிசை கற்றுத் தரவில்லை. எனக்குத் தமிழ் கற்றுத் தந்த ஆசிரியப்பெருமக்களில் சிலர் சற்று ஓசை நயத்தோடு பாடுவார்கள். ஆசிரியம், வெண்பா முதலிய பாக்களின் ஓசை வேறுபாடு குறைந்தளவுக்கேனும் எங்களுக்குத் தெரியும். வகுப்பறையில் இசையோடு பாடுவதென்றால் ஒரு இசைக் கச்சேரிபோல ஆகிவிடலாம் என்றும் இதன் காரணமாக இலக்கி யத்தின் மீது செல்ல வேண்டிய நாட்டம் வேறு திசையில் சென்று விடலாம் என்றும் நானும் என்னைப் போன்ற தமிழாசிரியர்களும் நினைத்திருக்கக் கூடும்.
Reviews
There are no reviews yet.