Description
இந்நூலை எழுதுவதற்கு என்னைத்தூண்டியதும் உற்சாகம் ஊட்டியதும் ஐவாதுப்புலவரின் பேரனின் சீடரும் எனது இளமை நண்பருமான கீழக்கரை அப்துல் ஹன்னான் புலவராவர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் புலவர் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச்சென்று, கீழக்கரை பனீ அஹ்மது மரைக்காயர் பாடிய சின்னச்சீருவைக் காட்டி, “இந்நூலிற்கு கொடை வள்ளலாக இருந்தவர் உங்களின் முப்பாட்டனார் கொடைவள்ளல் நெயினா மரைக்காயர் ஆவர். இவர் வள்ளல் சீதக்காதியின் தம்பி மாமுநெயினா என்ற பட்டத்து முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகன், முகம்மது அபூபக்கர் மரைக்காயரின் மூத்தமகன் குறிப்பிடப்பட்டிருந்ததனைக் காட்டினார். வள்ளல் சீதக்காதிக்கு ஆண் சந்ததி இல்லாததால் அவரின் தம்பியின் சந்ததியினரே வள்ளலின் ஆண் சந்ததியும் சேதுபதியின் அரசு நிர்வாக பதவிக்கும் பட்டத்திற்கும் உரிமை உடையவர்களுமாவர் எனக் கூறினார்.
Reviews
There are no reviews yet.