Description
கவி நுகர் செந்தமிழ் நெஞ்சம் ‘செவிநுகர் கவிகள்’ என்ற சீரிய செந்தமிழ்த் தலைப்பை வழங்குகின்றது. ‘செவிநுகர்’ என்ற அடைமொழி புலனாக்கும் உண்மை- இத்தொகுப்பில் அடங்கிய கவிதைகள் அனைத்தும் கவியரங்கில் ஒலிக்கப்பட்டு, செவிகளால் நுகரப்பட்ட செல்வங்களாக செவிகள் போற்றிய செல்வத்துட் செல்வங்களாக விளங்கின என்பது. அப்பேறு பெறாதோர் கண்நுகரும் கவிகளாகட்டும் என, நூல் வடிவு தந்தாலும், முதல் வடிவை – அடிப்படை வடிவை மறக்காமல் – மறுக்காமல் ‘செவிநுகர் கவிகள் ‘ என்றே பெயர் சூட்டியுள்ளார். மேலும் இப்பெயர் கவிதையின் ஓசைநயச் சிறப்பினையும் ஒலித்து நிற்பதாகும்.
Reviews
There are no reviews yet.