Description
தமிழ் மரபிலே தோன்றித் தமிழ்ப்பண்பாட்டிலே வளர்ந்து தமிழ் இலக்கிய நெறியில் நின்று அழியாத நூல்களை உருவாக்கிய சில இஸ்லாமியக் கவிஞர்கள் தந்த இலக்கியச் செல்வங்களின் செவ்வி சில கட்டுரைகளில் சுடர் விடுகின்றன. அப்பெருமக்களின் புலமைச்செழிப்பில் பூத்த கவி மலர்கள் உள்ளத்தைப் பரவசப்படுத்துகின்றன. அவர்கள் தமிழன்னைக்குச் சூட்டிய நித்திலக் கோவைகளை நாம் நன்கு அனுபவிக்க, கருத்தில் கொள்ள உதவுகின்றன. “வாழும் நெறி” பற்றிய கட்டுரைகள் வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டிய வகையினைத்தெளிவுபடுத்துகின்றன. இவற்றை நம் வாழ்க்கை ஓடத்துக்கு வழி காட்டும் ஒளித்தீபங்கள் என்றே கொள்ள வேண்டும். மொத்தத்தில் கட்டுரைகள் அனைத்தும் ஒளி வீசும் வைரங்கள். மாணிக்க மணிகள். மரகதக்கொத்துகள். தேனூறிய செந்தமிழ் நடையில் அமைந்த செல்வங்கள்.
Reviews
There are no reviews yet.