Description
வீடுகாத்தல் ஒரு குடும்பத்திற் காற்றுந் தனித்தொண்டாகும். நாடுகாத்தல் பல குடும்பத்திற் காற்றும் பயனுடைய பெருந்தொண்டாகும். இம்முறையில் பிறர்க்கென முயலும் பெருந்தகையார் அளவிறந்த இன்னல்களுக்குள்ளாவரென்பதுவரலாற்றுண்மையாகும். அவர்கட்கு மாற்றாரால் நேரும் இடர்களினும் யார் பொருட்டு முயல்கின்றார்களோ அப்போற்றாரால் நேரும் இடரும் இடுக்கண்ணும் பலவாம்; என்னை இப்போற்றார் தம்முரிமையையும் கடமையையும் உள்ளவாறுணரா மையும், முயல்வார் தம் பயன் கருதி முயல்கின்றனர் எனப் பிழைப்படக்கொண்டு பேசுவதும் ஆகிய செய்கைகளானென்க.
Reviews
There are no reviews yet.