Description
தமிழகத்தில் ‘நகரத்தார்’ வாழும் நாடு ஒன்று உண்டு. செட்டிநாடு எனப்படும் வணிகர் நாடு, அருட் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்கே வளரும் இந்நாடு பழமைக்குப் பழமை காட்டும்; புதுமைக்குப் புதுமை நாட்டும். இத்தகைய சீர்மை வாய்ந்த செட்டிநாட்டைப் பற்றிய ‘எல்லாப் பொருளும் ; இதன்பால் இல்லாத எப் பொருளும் இல்லை’ என்று சொல்லத்தக்க சிறப்புடையது இந்நூல், பல நாடு கண்டு பண்புற்ற நண்பர் ‘சோமலெ’ அவர்கள் ‘அமெரிக்காவைப் பார்!” என்று முன்னொருகால் மேலை நாட்டின் பெருமையைக் காட்டினார். எங்கெங்கே சென்றாலும் எக்காட்டைக் கண்டாலும், தன்னாடே பொன்னாடாகத் தோன்றும் என்னும் உண்மைக்கு ஒரு சான்றாக, ‘செட்டிநாட்டைப் பார்” என்று இப்பொழுது அழைக்கின்றார், ‘காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே’.
Reviews
There are no reviews yet.