Description
இவர்களுள் பலர் தமிழ் இலக்கிய இலக்கணத்தை பல்வேறு கோணங்களில் வளர்த்தனர். அவற்றிற்குப் பதவுரையென்றும், பொழிப்புரையென்றும், விளக்கவுரையென்றும், விரிவுரையென்றும், தொகுப்புரையென்றும் இலக்கிய இலக்கணங்களை மலைபோல் வளர்த்தனர் வேறு பலர், ஆனால் புதிய துறைகளில், பதிய கோலங்களில் புதிய நாடுகளிலும் செந்தமிழை உலவவிட்ட தனிப்பெருமை கிறீஸ்தவத் தமிழ்த் தொண்டர்களையே சாரும். மதத்தை வளர்க்க மட்டுமே மொழி படித்துத் தமிழ் வளர்த்தவர் அல்லர் இவர் என்பது எமது துணிபு. தமிழ் மொழியின் தொன்மை கண்டு, அம்மொழியின் சிறப்புகள் அறிந்து, அம்மொழிபாற் காதல் கொண்டு ஆய்வுகள் செய்தனர் – ஆக்கவேலைகளை ஆக்கி அளித்தனர்.
Reviews
There are no reviews yet.