Description
ஒரு தனி இலக்கியத்துக்கு விழா எடுத்துப் போற்றும் பணியினைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர், ‘கம்பரடிப்பொடி’ சா. கணேசன்தான். அதைப் பெருக வளர்த்தவரும் அவரே. இசுலாமியத் தமிழின் தலை இலக்கியமான சீறாப் புராணத்துக்கு எங்கள் கல்லூரியில் கடந்த பிப்ரவரித் திங்கள் 23-ஆம் நாள் நாங்கள் விழா எடுத்தோம். விளம்பர ஒப்பனையிளை மிகுதியாகப் பெற்றிருந்த விழா மலர், இலக்கிய ரசிகர்களின் அழகிய கண்களைக் கொஞ்சம் உறுத்திற்று. எனவே விழா மலரில் இடம்பெற்ற சில கட்டுரைகளோடு விழாவில் இலக்கியவாணர்கள் ஆற்றிய உரையினையும், வாசித்த கவிதை, கட்டுரைகளையும் இணைத்து இந்தச் செம்பதிப்பு வெளியாகிறது.
Reviews
There are no reviews yet.